அதிகரிக்கும் வங்கி மோசடிகள் – ஐசிஐசிஐ வங்கியின் எச்சரிக்கை பதிவு!

0
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் - ஐசிஐசிஐ வங்கியின் எச்சரிக்கை பதிவு!
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் - ஐசிஐசிஐ வங்கியின் எச்சரிக்கை பதிவு!
அதிகரிக்கும் வங்கி மோசடிகள் – ஐசிஐசிஐ வங்கியின் எச்சரிக்கை பதிவு!

ஐ சி ஐ சி ஐ வங்கி அதிகரிக்கும் வங்கி மோசடிகள் குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் மோசடிகள்:

சமீப காலங்களாக வங்கி அதிகாரிகள் போன்று வாடிக்கையாள்களை தொடர்பு கொண்டு நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான விரிவான எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏமாற்றும் நிகழ்வுகளில் மட்டுமே வங்கி ஊழியர்கள் உங்களை அழைத்து தனிப்பட்ட விவரங்களை கேட்பது நடக்கும் என்றும் தனது வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர் அழைப்பு போல் வரும் எதையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறார்கள். மேலும் அழைக்கும் மோசடி நபர்கள் வங்கி கணக்கு முடக்கம் போன்ற சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் ஏமாற்ற முயல்கின்றனர்.

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? – RBI கொடுத்த விளக்கம்!

எந்த சந்தர்ப்பத்திலும் OTP, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு எண், CVV எண், ஆன்லைன் கணக்கு விவரங்களை ஐசிஐசிஐ வங்கி ஒருபோதும் கேட்காது என்றும், வங்கி தரப்பிலிருந்து ஒருபோதும் வேறு கணக்கிருக்கு பணத்தை மாற்றுமாறு சொல்லப்படாது. இது போன்ற அழைப்புகள் வந்தால் அவற்றை உடனே துண்டிக்க வேண்டும். உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது, வங்கி கணக்கில் ஆபத்துகளை சரி செய்ய விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று வரும் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டாம். இதுபோல் வரும் அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழந்தால் 1930 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்து உடனடியாக தெரிவிக்குமாறு வங்கி வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!