ICC டெஸ்ட் தரவரிசை – 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோஹ்லி, பும்ராஹ் முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 5வது இடத்திற்கு பின்தங்கி உள்ளார். மறுபுறம் பும்ராஹ் 9வது இடத்திற்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ICC தரவரிசை பட்டியல்:
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் நாட்டிங்ஹாமில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி டெஸ்ட் வீரர் தரவரிசையில் முன்னேறியுள்ளனர். ரூட், கடந்த முறை முதலிடத்தில் இருந்தார். இதனால் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். பும்ரா 10 இடங்களைப் பெற்று பந்துவீச்சாளர்களுக்கான டாப் 10 இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
சென்னையில் தளபதி விஜயை சந்தித்த, தல தோனி – வைரலாகும் புகைப்படங்கள்!
இங்கிலாந்தின் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (7) மற்றும் ஒல்லி ராபின்சன் (46) மற்றும் ஷர்துல் தாக்கூர் (55) தரவரிசையில் முன்னேறி உள்ளனர். இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்து மூன்று இடங்கள் முன்னேறி 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளார், மேலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தரவரிசையில் 56வது இடத்தை பிடித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
ஆல்ரவுண்டர் தரவரிசையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 384 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்தில் நீடிக்கிறார். மறுபுறம் பவுலர்களுக்கான தரவரிசையில் அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் முறையே 6 மற்றும் 7வது இடத்தை பிடித்து உள்ளனர்.