இந்திய அணி வீரர்களின் புதிய தேர்வில் எனக்கு உடன்பாடு இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி!

0
இந்திய அணி வீரர்களின் புதிய தேர்வில் எனக்கு உடன்பாடு இல்லை - ஆகாஷ் சோப்ரா பேட்டி!
இந்திய அணி வீரர்களின் புதிய தேர்வில் எனக்கு உடன்பாடு இல்லை - ஆகாஷ் சோப்ரா பேட்டி!
இந்திய அணி வீரர்களின் புதிய தேர்வில் எனக்கு உடன்பாடு இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி!

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை BCCI நேற்று அறிவித்தது. இதில் 2 வடிவங்களிலும் 18 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்திய அணி தேர்வு குறித்து ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா பேட்டி:

இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி மூன்றிலும் தோல்வியடைந்து தொடரை கைப்பற்ற தவறியது. இதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது . வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று இந்திய அணி ஹெட் கோச் ராகுல் டிராவிட் சமீபத்தில் பேட்டியளித்தார்.

நேற்று வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடருக்கான இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளை BCCI அறிவித்தது. தற்போது இது குறித்து BCCI அதிகாரி ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார். அதில் இந்திய அணியின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை அணியில் சேர்க்காதது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த வருண் சக்கரவர்த்தி, ராகுல் சஹார் இருவரும் ஒருநாள், டி20 அணியில் இடம் பெறாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். இதை தொடர்ந்து பஞ்சாப் அணி வீரர் பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று பேட்டியளித்தார்.

தமிழக மருத்துவ மேற்படிப்பு குறித்த இட ஒதுக்கீடு & ஊக்க மதிப்பெண்கள் விவரம் – ஐகோர்ட் புதிய உத்தரவு!

IND VS WI தொடருக்கான இந்திய டி20 அணி:-

ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.

IND VS WI தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!