தமிழக கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0
தமிழக கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் - உயர் நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களுக்கு, அந்த ஆண்டு முதல் நியமன ஒப்புதல் வழங்க கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனம்

சென்னை, நந்தனத்தில் உள்ள YMCA உடற்கல்வி கல்லூரியில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 4 பேர் நியமனம் செய்யப்பட்டனர். அதாவது இந்த பணியிடங்களுக்கு புனித கலாமேரி, லதா மற்றும் ஜான்சன் பிரேம்குமார், குளோரி டார்லிங் மார்கரெட் ஆகியோர் கடந்த 2000 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இவர்களின் பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி, இயக்குநரகத்துக்கு கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

TN Job “FB  Group” Join Now

ssc

ஆனால் கல்லூரி கல்வி இணை இயக்குனர், இந்த 4 பேரும் 2007 ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து கல்வி இயக்குனரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி பணியில் இருக்கும் 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குக்கு, மனுதாரர்கள் பணியாற்றும் கல்லூரியில் கூடுதலாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் இவர்கள் நியமனம் செய்யப்பட்டதால் 2007 முதல் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கல்லூரி கல்வி இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ரூ.2000 நிவாரணம் வழங்கல் – முதல்வர் அறிவிப்பு!!

இந்த நிலையில் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கல்லூரி தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து இந்த நான்கு பேரும், பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வால் காலியான இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது தெரிகிறது என கூறி அவர்கள் 2007 ல் பணி நியமனம் செய்ததாக அளித்த ஒப்புதலை ரத்து செய்துள்ளார். மேலும் இந்த நான்கு பேருக்கும் அவர்கள் பணியில் நியமிக்கப்பட்ட ஆண்டில் இருந்து ஒப்புதல் அளித்து, அதற்கான சம்பள தொகையையும் வழங்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!