தமிழக சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் 30,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

0
தமிழக சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் 30,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
தமிழக சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு - மாதம் 30,000 ஊதியம்! முழு விவரம் இதோ!
தமிழக சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் 30,000 ஊதியம்! முழு விவரம் இதோ!

தமிழகத்தில் சமூக நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமானது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் சேவை அளிக்கும் நோக்கில் பெண்கள் உதவி மையம் புதிய திடத்தை உருவாகியுள்ளது. இத்திட்டத்தில் முக்கிய அம்சம் மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவது போன்றதாகும். இத்திட்டத்தில் பணியாற்ற ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சமூகப் பணியில் முதுகலை பட்டம் (M.S.W) பெற்றவர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் உள்ளூரை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ. 20,000 ஊதியமாக வழங்கபடும் மற்றும் வேலை தொடர்பான பயணம் மேற்கொண்டால் அதற்குரிய பயணபடியும் வழங்கப்படும். உளவியல் அடுத்ததாக ஆலோசகர் பணிக்கு சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர் ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கு வாகனம் ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்!

பாதுகாப்பாளர் பணிக்கு அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். ஊதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும். மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https chennai nic in/ எனும் இணையத்தளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஜூன் 30ம் தேதிக்குள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!