தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்!

0
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் அமல்!
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - புதிய விதிமுறைகள் அமல்!
தேசிய பென்சன் திட்ட (NPS) கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்!

தேசிய பென்சன் திட்டம், பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பென்சன் பலன்கள் கிடைப்பது ஒருபுறம் இருக்க, வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இதனால், இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தின் தொடர்பான விதிமுறைகளை திருத்தியுள்ளது.

புதிய விதிமுறைகள்:

தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்துள்ளது. இந்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னாளில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம். தனியார் துறை ஊழியர்களும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.

TN Job “FB  Group” Join Now

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகை, மெச்சூரிட்டி தொகை, மொத்த பென்சன் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே,பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவோருக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் சிறப்பான திட்டமாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில் மத்திய அரசு தேசிய பென்சன் திட்டம் தொடர்பான விதிமுறைகளை தற்போது திருத்தி அமைத்துள்ளது.

இந்நிலையில், தேசிய பென்சன் திட்ட கணக்கில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகள் மாற்றி, புதிய விதிமுறைகளையும் அளித்துள்ளன. இதையடுத்து தேசிய பென்சன் திட்ட கணக்குகள், Tier 1 மற்றும் Tier 2 என 2 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு தேசிய பென்சன் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் நிதியில், அதிகபட்சம் 50% வரை பங்குச் சந்தை முதலீட்டுக்கு ஒதுக்கிக்கொள்ளலாம் எனவும் பங்கு முதலீட்டில் எவ்வளவு விகிதம் முதலீடு செய்வது மற்றும் எவ்வளவு ரிஸ்க் எடுப்பது என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதுபோக மீத தொகையை அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வி திட்டத்தில் யோகா பாடம் இணைப்பு!

இந்நிலையில் தேசிய பென்சன் திட்ட கணக்கில், நிதி ஒதுக்கீட்டை இதுவரையில் ஆண்டுக்கு 2 முறை வரை மாற்றிக்கொள்ளலாம். ஆகவே இந்த விதிமுறையானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய விதிமுறைப்படி, இனி ஆண்டுக்கு 4 முறை, உங்கள் நிதி ஒதுகீட்டை மாற்ற முடியும். எனவே இது Tier 1 கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் , ஆனால் பென்சன் நிதி நிர்வாகியை (pension fund manager) ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!