தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
மொபைல் போனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
மொபைல் போனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கலாம் - எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டுக்கு மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் – எளிய வழிமுறைகள் இதோ!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் பயனர்கள் இனி எளிமையாக மொபைல் போனிலேயே விண்ணப்பித்து கொள்ளும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு:

தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் மூலமாக தான் வழங்கும். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பித்தல் போன்ற பலவற்றிற்க்கு இது முக்கிய ஆவணமாகும். பல்வேறு காரணங்களுக்காக பயனர்கள் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கின்றனர்.

முன்னர் போல் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இணையவழியில் விண்ணப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அரசு வழங்கியுள்ளது. தற்போது மேலும் நவீன மயமான வழிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மொபைல் மூலம் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதா விவகாரம் – முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு?

மொபைல் மூலம் விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • இந்த பகுதியில் உங்களின் அனைத்து விவரங்களையும் முழுவதுமாக பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் நபரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் முறையாக உள்ளிட்ட வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் மாவட்டம், தாலுக்கா, கிராமம் என்று தேவையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, குடும்ப உறுப்பினர்களை சேர்க்கும் பகுதிக்கு சென்று உங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர், குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அரசு அங்கீகரித்துள்ள ஆவணங்களில் எதாவது ஒன்றை இணைக்க வேண்டும்.
  • எரிவாயு விவரங்களை பதிவு செய்த பின்னர் உங்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • வாக்காளர் அட்டை
  • எரிவாயு நுகர்வோர் அட்டை
  • வரி ரசீது
  • வாடகை ஒப்பந்தம்
  • குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம்
  • வீடு ஆவணம்
  • மின்சார ரசீது
  • தொலைபேசி ரசீது
  • வங்கி கணக்கு புத்தகம்
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுனர் உரிமம்
  • பான் அட்டை
  • வீட்டு வசதி வாரிய ஆவணங்கள்
  • தபால் அடையாள அட்டை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!