முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

0
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – தீவிர சிகிச்சை!

நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னாள் பிரதமர்:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவின் 13 வது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.

அமேசான் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு – முழு விபரங்கள் இதோ!

மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது என்று ஆழ்ந்த கருத்துகள் உள்ளது. மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்து வந்தார்.

1 முதல் 4ம் வகுப்பு வரை அக்.18ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மன்மோகன் சிங் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்துவருகிறார். இந்தநிலையில் இன்று திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயவியல் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முதல் காய்ச்சல் இருந்ததையடுத்து இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச்சத்து திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!