தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் தகவல்!

0
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்? வானிலை மையம் தகவல்!

கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அக். 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழ்நாடில் இன்று கன்னியாகுமரி, தென்காசி, தர்மபுரி, தேனி, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருநெல்வேலி, விருதுநகர்‌, மதுரை, கரூர்‌, நாமக்கல்‌, ஈரோடு, நீலகிரி , சேலம்‌, கிருஷ்ணகிரி, திண்டுக்கல்‌ மற்றும்‌ திருப்பத்தூர்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனை தொடர்ந்து நாளை (அக்.19) திருப்பத்தூர்‌, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருச்‌சி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நீலகிரி, நாமக்கல்‌, விழுப்புரம்‌, வேலூர்‌, ஈரோடு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி, கரூர்‌, மதுரை, விருதுநகர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

அக்டோபர் 20ம் தேதி நீலகிரி, திருநெல்வேலி, திருப்பூர்‌, ஈரோடு, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தென்காசி, பெரம்பலூர்‌, கன்னியாகுமரி, சிவகங்கை, திருச்‌சராப்பள்ளி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மதுரை, அரியலூர்‌, கரூர்‌, கடலூர்‌, சேலம்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌ தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

SBI வங்கியில் Deposit செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் – இன்னும் நிறைய சேமிக்கலாம்!

அதே போல அக். 21,22 ம் தேதி அன்று புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. மேலும் அன்றைய தினம் தமிழகத்தை பொறுத்தவரை கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, நாகப்பட்டினம்‌, தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர்‌, விருதுநகர்‌, திருநெல்வேலி, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!