3 மடங்காக உயரப்போகும் வெப்பம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!

0
3 மடங்காக உயரப்போகும் வெப்பம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!
3 மடங்காக உயரப்போகும் வெப்பம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!
3 மடங்காக உயரப்போகும் வெப்பம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!

பருவநிலை மாறுபட்டால் உலக அளவில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலையால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதற்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வெப்பத்தின் தாக்கம்:

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வெப்ப உமிழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக 70,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இந்த வெப்ப அலைகளின் எதிர்மறைமையான போக்கு 2026 வரையிலும் நீடிக்கும் என்று உலக வானிலை அமைப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது காற்றில் உள்ள வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போகாமல் ஒரே இடத்தில் தங்கும் போது வெப்ப அலைகள் ஏற்படுகிறது.

TNPSC Group 2 & 2A முடிவுகள் எப்போது அறிவிப்பு? முக்கிய தகவல்!

தற்போதைய தகவலின் படி பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் வரும் 2,100-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப அளவு கடுமையாக இருக்கும். தற்போது கோடை காலத்தில் நிகழும் இந்த வெப்ப அலை வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 முதல் 50 மடங்கு என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க கூடும் என்று வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு பேராபத்தை விளைவிக்க கூடிய வெப்ப குறியீடு ஆனது 124 டிகிரி (51 டிகிரி செல்சியஸ்) என்ற அளவில் வருங்காலத்தில் பதிவாக கூடும் என்று ஆய்வின் தலைவர் ஹார்வர்டு கூறியுள்ளார். இந்த ஆய்வில் அவர் கடந்த 1979-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட வெப்ப நிகழ்வை அடிப்படையாக வைத்து வரும் 2050 மற்றும் 2100ம் ஆண்டு வரை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பால் உலகம் முழுவதும் கடல் நீர்மட்டம் உயரும் மேலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் இது உயிரினங்கள் அழிவுக்கு வழிவகுக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!