தமிழக பேருந்து பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!

0
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் - இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!
தமிழக பேருந்து பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்!

தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தமிழக அரசு வலியுறுத்தியது. இதன் பேரில் தற்போது ஆம்னி பேருந்து கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.

பேருந்து கட்டணம்:

தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயித்துள்ளதை தாண்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. ஏற்கனவே மக்கள் பொருளாதார சரிவால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நேரத்தில் தனியார் பேருந்துகளில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கால விடுமுறை தினங்களிலும், பிற அரசு விடுமுறை நாட்களிலும் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணிப்பர்.

சிலர் முன் கூட்டியே அரசு பேருந்துகளில் பதிவு செய்து பயணிப்பர். சிலர் பயணத்தை கடைசி நேரத்தில் திட்டமிடுவார்கள். இவர்களுக்கு அரசு பேருந்துகளில் பெரும்பாலும் இடம் கிடைக்காது. அதனால் இவர்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை தேர்வு செய்கின்றனர். இதை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து பயணிகள் அரசிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அரசு சார்பாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – டிசம்பர் வரை இனி இது இலவசம்!

Exams Daily Mobile App Download

ஆனாலும் இந்த கட்டண கொள்ளை தொடர்ந்து நடந்து தான் வருகிறது. இந்த நிலையில் பயணக் கட்டணம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த 27-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தனியார் பேருந்துகளில் கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தினார். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு தற்போது பேருந்துகளின் தரம் மற்றும் பயணிக்கும் தூரத்தை பொறுத்து 10 முதல் 22 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!