மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 6% சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 6% சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும், 6% வரைக்கும் கூட சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கிறது. இந்நிலையில் சம்பள உயர்வினை எதிர்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், ஜூலை மாதத்தின் இறுதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச 3 கேஸ் சிலிண்டர்கள் – அரசு திடீர் அறிவிப்பு!

அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 6 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது வரைக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் என்ற அளவில் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீதமாக அகவிலைப்படி இருக்கும். மேலும் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் DA உயர்வையும் அரசாங்கம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, எப்போதுமே ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வையும் உறுதி செய்கிறது. மே மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்திலும் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தால் DA உயர வாய்ப்பிருக்கிறது. மேலும், நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிவிவரங்களை பொறுத்துதான் அந்தந்த மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!