SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு! முழு விவரம் இதோ!

0
SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு - ஹால் டிக்கெட் வெளியீடு! முழு விவரம் இதோ!
SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு - ஹால் டிக்கெட் வெளியீடு! முழு விவரம் இதோ!
SBI வங்கி அதிகாரி வேலைவாய்ப்பு – ஹால் டிக்கெட் வெளியீடு! முழு விவரம் இதோ!

SBI வங்கியின் PO பணிக்கு இம்மாதம் முதல் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது.

Bank PO Prelims Online Mock Test – Free Registration 

ஹால் டிக்கெட்டு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தகுதிகாண் அதிகாரி (PO) பணிக்கான தேர்வுகளை நடத்த இருக்கிறது. அந்த வகையில் இது குறித்த அறிவிப்புகளை SBI வங்கி வெளியிட்டிருக்கும் நிலையில் தேர்வுக்கான நுழைவு அட்டைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்  sbi.co.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை (நவ.12) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இப்போது SBI PO தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 27 வரை கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

SBI PO 2021 ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய,

  • முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான  sbi.co.in  பக்கத்தை திறக்கவும்.
  • முகப்புப் பக்கத்தில் உள்ள Careers ஆப்ஷனுக்கு செல்லவும்
  • அதில் current openings என்பதை தேர்வு செய்யவும்.
  • பிறகு, probationary officers பக்கத்திற்கு செல்லவும்
  • அங்கு SBI PO அட்மிட் கார்டு 2021 அல்லது ப்ரிலிம்ஸ் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை படிக்கும் இணைப்பை கிளிக் செய்யவும்
  • PO 2021 ஹால் டிக்கெட்டை அணுக உள்நுழைவு விவரங்களை கொடுக்கவும்.
  • அட்மிட் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பிரிண்ட்அவுட் எடுத்துக்கொள்ளவும்.
தேர்வு முறை:
  • இப்போது வெளியாகி இருக்கும் ஹால் டிக்கெட் முதற்கட்டத் தேர்வுக்கானது.
  • இந்த தேர்வில் 100 மதிப்பெண்களை உள்ளடக்கிய கேள்விகள் அப்ஜெக்டிவ் டைப்பில் இருக்கும்.
  • ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
  • இத்தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும்.
தேர்வு நடைபெறும் தேதி:

SBI PO தேர்வு நவம்பர் 20, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இவற்றில் நேர இடைவெளிகள் வழங்கப்படும், அதன்படி விண்ணப்பதாரர்கள் ஆஜராக வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:
  • மொத்தம் 2,056 ப்ரோபேஷனரி அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக SBI PO தேர்வு நடத்தப்படுகிறது.
  • இப்பணிக்கு முதற்கட்டத் தேர்வு, முதன்மைச் சுற்று, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாகத் தேர்வு நடைபெறுகிறது.
  • அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

சென்னை: கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் ஷாக்!

  • முதற்கட்ட தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட்டு, மெயின் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கிடைக்கும்.
  • மெயின் தேர்வு டிசம்பரில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் ஜனவரி 2022 இல் அறிவிக்கப்படும்.
  • நேர்காணலுக்கான அனுமதி அட்டைகள் பிப்ரவரியில் கிடைக்கும்.
  • இறுதி முடிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
ஊதியம்:
  • SBI PO பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.27,620 கொடுக்கப்படும்.
  • மாத சம்பளம் ரூ.23,700 முதல் 42,020 வரை இருக்கும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் HRD, DA, CCA மற்றும் பிற கொடுப்பனவுகளுக்கும் தகுதி பெறுவார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!