BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
IBPS தேர்வாணையம் ஆனது Probationary Officer (PO) பணிகளுக்கான Prelims போட்டி தேர்வுகளை நடத்த உள்ளது. தற்போது தமிழகத்தின் No.01 பயிற்சி மையமான Dexter Academy இத்தேர்விற்கு பயில்வோருக்கு ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது.
BANK PO PRELIMS ஆன்லைன் மாதிரி தேர்வு:
இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளான கனரா பேங்க், இந்தியன் பேங்க், யூனியன் பேங்க் உட்பட மேலும் பல வங்கிகளில் காலியாக உள்ள Probationary Officer (PO) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு IBPS தேர்வு வாரியம் மூலமாக கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒவ்வொரு பிரிவு வாரியாக மொத்தம் 4135 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது இன்று (10.11.2021) தான் முடிவடைய உள்ளது.
Prelims, Mains மற்றும் Interview என மூன்று கட்ட சோதனைகளின் மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி முதலில் முதற்கட்ட தேர்வுகள் (Prelims) வரும் 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானபோதே அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் பதிவு செய்தவர்கள் இந்த தேர்விற்கு தற்போது தயாராகிக் கொண்டு உள்ளனர்.
அவ்வாறு படித்து வரும் தேர்வுகளுக்கு அவர்களின் திறனை மேம்படுத்திட ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy தற்போது நடத்த உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை (12.11.2021) காலை தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Bank PO Prelims Online Mock Test – Free Registration Now
Mock Test “WhatsApp Group” Join Now