TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
TN TRB முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இரண்டு வகையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்விற்கான முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்த உள்ளது. இதன்அடிப்படையில் முதல் கட்ட தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு வரும், 12 முதல் 15 ம் தேதி வரையில் தேர்வுகள் நடத்தப்படும் என கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கால அட்டவணையில் வரும், 16 முதல் 20 ம் தேதி வரை மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

அனைத்து பள்ளிகளுக்கும் மார்ச் 6 வரை ஒரு மாத காலம் விடுமுறை – இன்று முதல் துவக்கம்!

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வகையில் தேர்தல் பணிக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஹால் டிக்கெட்டுகள், இரண்டு வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ம் தேதி தவிர மற்ற நாட்களில் தேர்வு அட்டவணையில் கூறியபடி தேர்வு மையத்தில் கணினி மூலம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பயிற்சி தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட்டுகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – திருப்புதல் தேர்வு அறிவுறுத்தல்கள்!

இந்த வகையில் மூன்று நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். மேலும் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதனுடன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும், தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும்.மேலும் முற்பகல் தேர்வுக்கு காலை 7.30 மணிக்கு முன்பு மற்றும் பிற்பகல் தேர்வுக்கு, 1.30 மணிக்கு முன்பும் தேர்வு மையத்திற்குள் வந்துவிட வேண்டும். கணினி வழி பயிற்சி தேர்வு மேற்கொள்வோர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வசதியில், பயிற்சி தேர்வை மேற்கொள்ளவும். மேலும் கூடுதல் விபரங்களை அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!