![HAL நிறுவனத்தில் Apprentices வேலை - டிகிரி / Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது! HAL நிறுவனத்தில் Apprentices வேலை - டிகிரி / Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/11/HAL-நிறுவனத்தில்-Apprentices-வேலை.jpg)
HAL நிறுவனத்தில் Apprentices வேலை – டிகிரி / Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு || தேர்வு கிடையாது!
Graduate Apprentices, Diploma Apprentices பணிகளுக்கு என இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்டில் (HAL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 30.11.2023 அன்று முதல் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | HAL |
பணியின் பெயர் | Graduate / Diploma Apprentices |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் காலியிடங்கள்:
HAL நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentices, Diploma Apprentices பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Apprentices கல்வி:
Graduate / Diploma Apprentices பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் B.Tech, BE, B.Com, BCA, B.Sc, Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
Apprentices வயது:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 26 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Apprentices வயது தளர்வுகள்:
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
- PH – 10 ஆண்டுகள்
HAL தேர்வு செய்யும் விதம்:
இந்த HAL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Merit List, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.67,000/- சம்பளமாக பெற வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
HAL விண்ணப்பிக்கும் விதம்:
Graduate / Diploma Apprentices பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 30.11.2023 அன்று முதல் 14.12.2023 அன்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.