எலிமினேஷனிற்கு வந்த கிரேஸ், வித்யூ, வருத்தத்தில் மணிமேகலை – “குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ ரிலீஸ்!

0
எலிமினேஷனிற்கு வந்த கிரேஸ், வித்யூ, வருத்தத்தில் மணிமேகலை -
எலிமினேஷனிற்கு வந்த கிரேஸ், வித்யூ, வருத்தத்தில் மணிமேகலை - "குக் வித் கோமாளி சீசன் 3" ப்ரோமோ ரிலீஸ்!
எலிமினேஷனிற்கு வந்த கிரேஸ், வித்யூ, வருத்தத்தில் மணிமேகலை – “குக் வித் கோமாளி சீசன் 3” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் இந்த வாரம் ரஜினிகாந்த கெட்டப்பில் கோமாளிகள் களமிறங்கி இருக்கிறார்கள். தொடக்கத்தில் ஸ்ட்ராங் போட்டியாளர்களான கிரேஸ் மற்றும் வித்யூலேகா எலிமினேஷன் வர வேண்டும் என மணிமேகலை சொன்னது போல தற்போது நடந்துள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

குக் வித் கோமாளி ப்ரோமோ:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கோமாளிகளின் நகைச்சுவை கன்டென்ட்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அதனால் வாரந்தோறும் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் மக்களின் ஆதரவுடன் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது சீசன் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதில் கடந்த சீசன்களில் கலக்கிய பாலா, மணிமேகலை, ஷிவாங்கி, சுனிதா ஆகியோருடன் குரேஷி, அதிர்ச்சி அருண், சூப்பர் சிங்கர் பரத், ஷீத்தல் ஆகியோர் இணைந்து கோமாளிகளுக்கு சமையல் செய்வதில் உதவி செய்கின்றனர். சமையல் செய்யும் போட்டியாளர்களில் பாரதி கண்ணம்மா ரோஷினி, கிரேஸ் கருணாஸ், வித்யூலேகா, முத்துக்குமார், தர்சன், அம்மு அபிராமி ஆகியோர் இருக்கின்றனர். அதில் கிரேஸ் மற்றும் வித்யூலேகா ஸ்ட்ராங் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கண்ணம்மாவுக்கு விவாகரத்து கொடுத்த பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அந்த வகையில் இந்த வார எபிசோடு குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரஜினிகாந்த் கெட்டப்பில் கோமாளிகள் களமிறங்கி இருக்கின்றனர். பாட்சா போல மணிமேகலை வேடமிட்டு வர இந்த எபிசோடில் வழக்கம் போல ரோஷினி எலிமினேஷனிற்கு வராமல் கிரேஸ் வித்யூ வர வேண்டும் என நிகழ்ச்சி தொடக்கத்தில் அவர் சொல்ல, அதே போல இறுதியில் எலிமினேஷனில் கிரேஸ் இருப்பது போலவும் வித்யூலேகா எலிமினேடாக இருப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் மணிமேகலை நான் சும்மா விளையாட்டிற்கு சொன்னேன் என மனம் வருத்தப்பட்டு பேசுகிறார். அதெல்லாம் ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!