21,678 அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – வெளியான முக்கிய அறிவிப்பு!

0
21,678 அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - வெளியான முக்கிய அறிவிப்பு!

மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித் துறையானது, மாநிலம் முழுவதும் உள்ள 1,258 பள்ளிகளில் மொத்தம் 21,678 ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது.

21,678 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஜில்லா பரிஷத் (ZP), மாநகராட்சிகள், நகர சபைகள் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகள் என மொத்தம் உள்ள 1,258 பள்ளிகளில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 21,678 பணியிடங்களுக்கான அறிவிப்பை அம்மாநில பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா கல்வி ஆணையர் சூரஜ் மாந்தரே வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகள் நவம்பர் 2023 க்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது.

அரசு பல ஆண்டுகளுக்குப் பிறகு, கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்களில் ஆசிரியர் ஆட்சேர்ப்புகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிப்ரவரி/மார்ச் 2023 இல் நடைபெற்ற ஆசிரியர்களின் திறன் மற்றும் நுண்ணறிவுத் தேர்வுக்கு (TAIT) 2,39,730 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தாலும், 2,16,443 பேர் அதற்கு தகுதியானவர்கள். இந்தத் தேர்வர்களும் 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!