ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் பெறும் தேதி – தமிழக அரசு அறிவிப்பு..!

0
ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் பெறும் தேதி
ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் பெறும் தேதி

ரேஷன் கடைகளில் இலவச அத்தியாவசிய பொருட்கள் பெறும் தேதி – தமிழக அரசு அறிவிப்பு..!

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு இலவச அத்யாவசிய பொருட்கள் அதாவது அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்க அரசு முடிவெடுத்து நாளை முதல் வழங்க தயார் நிலையில் உள்ளது. ரேஷன் கார்டு உள்ளவர்கள் நாளை முதல் வாங்கி கொள்ளலாம்.

Rs.1000/- வழங்கிய அரசு:

இதற்கு முன்னர் கடந்த 2ஆம் தேதி முதல் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 1000 வழங்க பட்டு வருகிறது. அடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். 2 நாட்கள் வழங்கப்பட்ட நிவாரணநிதி பின்னர் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களும் வீடுகளுக்கு நேரில் சென்று நிவாரண நிதி வழங்கப்பட்டன. நிவாரண நிதி வழங்கும் பணியில் எந்த புகாருக்கும் இடம் கொடுக்காமல் ஊழியர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு சலுகை தொகுப்பு மத்திய அரசு ஆலோசனை.!

ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சலுகை:

நெருக்கடி நிலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலைபார்ப்பது மட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும் வேலைக்கு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க தொடர்ந்து பணிபுரிந்து வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மக்களுக்காக அனைவரும் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுங்கள் – பிரதமர் மோடி ட்விட்..!

இவ்வகையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் 2.02 கோடி நபர்களுக்கு உணவு தானியங்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழக பொது விநியோக அமைப்பில், ரேஷன் கடைகளில் 21,517 சேல்ஸ்மேன்களும், 3,777 பேக்கர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சேல்ஸ்மேன்களுக்கு தலா ரூ.2,500 தொகையும், பேக்கர்களுக்கு தலா ரூ.2,000 தொகையும் வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!