தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் – இன்று முதல் இயக்கம்!

0
தமிழகத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் - இன்று முதல் இயக்கம்!

தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 5 புதிய சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அரசு சிறப்பு பஸ்கள்:

தமிழகத்தை பொறுத்தவரை முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு வட மாநிலத்திலிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்று ராமர் பாதம், ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், கோதண்ட ராமர் கோவில், தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்து வருகின்றனர், இந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் மூலம் சென்ற வருகின்றனர். தற்போது அரசு சார்பாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் பஸ் நிலையிலிருந்து சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணத்தில் சிறப்பு பஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் Project Analyst வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்து சிறப்பு பஸ்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும். இதில் பயணி ஒருவருக்கு 80 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 42 பேர் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஏறும் பயணிகள் ஒரு இடத்தில் இறங்கி விட்டால் மீண்டும் இதே சிறப்பு பஸ் வந்தால் அந்த டிக்கெட்டை காண்பித்து எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். முதல் கட்டமாக இந்த பஸ்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!