தமிழக அரசின் இ-பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – தேவையான ஆவணங்கள்!

0
தமிழக அரசின் இ-பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்!
தமிழக அரசின் இ-பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்!
தமிழக அரசின் இ-பாஸ் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – தேவையான ஆவணங்கள்!

தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை அவசியமானதாகும். அந்த வகையில் இ-பதிவுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இ-பதிவு:

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 14 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – ஆட்சியர் அறிவிப்பு!!

இந்த பொது முடக்க காலத்தில் இறப்பு, மருத்துவம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்துக்கு பயணிக்க இ-பதிவு கட்டாயம்.

அந்த வகையில் இ-பதிவுக்கு விண்ணப்பிக்க,
  • முதலாவது https://eregister.tnega.org/ என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
    அதில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர், மற்றவர்கள் என்ற இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • இவற்றில் உங்களுக்கு தேவையானதை பதிவு செய்த பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சாக் குறியீட்டை பதிவு செய்யவும்.
  • பிறகு Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • இந்த OTP எண்ணை கொடுத்தால், ஓரு புதிய பக்கம் திறக்கும்.
  • அதில் பயணம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.பிறகு எந்த வாகனத்தில் செல்லுகிறீர்கள் என்ற விவரத்தை கொடுக்க வேண்டும்.
  • என்ன காரணத்துக்காக பயணத்தை மேற்கொள்ள விரும்பும் விவரத்தை கொடுக்க வேண்டும்.
  • பிறகு இ- பதிவுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பயண தேதி, விண்ணப்பதாரரின் பெயர், ஐடி ஆதாரம் எண், விண்ணப்பதாரர் வாகன எண், பயண வரம்பு ஆகியவற்றை பதிவிடவும்.
  • இதில் முக்கியமாக பயணத்திற்கான காரணம், வாகன வகை மற்றும் அடையாள சான்றின் நகலைப் பதிவேற்றுதல் அவசியம்.
  • இவற்றை பூர்த்தி செய்த பின்னர் அந்த விண்ணப்பம் ஆவணப்பக்கத்திற்கு அனுப்பப்படும்.
  • சுயதொழில் வல்லுநர்கள் பிரிவில் விண்ணப்பிக்க,விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, மாவட்டம், வாகனம், வாகன எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து அடையாள அட்டையின் பதிவேற்ற வேண்டும்.
  • இந்த வணிக நிறுவனத்திற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!