வெளிநாடுகளுக்கு 10000 டன் வெங்காயம் ஏற்றுமதி – அரசு அனுமதி!

0
வெளிநாடுகளுக்கு 10000 டன் வெங்காயம் ஏற்றுமதி - அரசு அனுமதி!

வெளிநாடுகளுக்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வெங்காய ஏற்றுமதி:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெங்காயத்தின் விலை அதிகமாக காணப்பட்டது. இவ்விலை உயர்வுக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்ததும், வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுவதும் தான் காரணம் என மத்திய அரசு கருதியது. எனவே வெங்காய வரத்து அதிகரிக்கும் வரை வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை நிறுத்துமாறு அரசனது அறிவித்தது. இதன் படி, மார்ச் மாதம் வரை வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி தடை செய்யப்பட்டது. இதனால் சிரமப்பட்ட வெளிநாடுகள் வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தது.

தேர்தலை முன்னிட்டு விலை குறைய போகுதா? – அரசு எடுத்த நடவடிக்கை!

இக்கோரிக்கைக்கு இணங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 14,400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசானது மார்ச் மாதம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அரசானது தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்சிஇஎல்) மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கூடுதலாக 10,000 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஏப்ரல் 3ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த தகவலை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!