தேர்தல் நாட்களில் விடுமுறை – விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்!

0
தேர்தல் நாட்களில் விடுமுறை - விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்!

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நாட்களில் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

தேர்தல் விடுமுறை:

இந்தியத் தேர்தல் ஆணையமானது நேற்றைய தினம் (மார்ச் 16) நடப்பாண்டுக்கான மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது. இதன் படி, இத்தேர்தலானது ஏப்ரல் 19 மற்றும் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இத்தினங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்குரிமை உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 (RP சட்டம்) படி, வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்த விடுமுறையானது தினக்கூலி மற்றும் சாதாரண ஊழியர்களும் வழங்கப்படும். தேர்தலின் போது விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும். மேலும் அவர்களுக்கு ஆர் பி சட்டத்தின்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இருப்பினும் பணியாளர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது முதலாளிக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய வேலையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விடுமுறை விலக்கு அளிக்க நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள் நீட்டிப்பு!…. தேர்தலை முன்னிட்டு குட் நியூஸ்

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!