இந்தியாவில் அரசாங்க சான்றிதழ்களை பெற புதிய விதிமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
இந்தியாவில் அரசாங்க சான்றிதழ்களை பெற புதிய விதிமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் அரசாங்க சான்றிதழ்களை பெற புதிய விதிமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் அரசாங்க சான்றிதழ்களை பெற புதிய விதிமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதில் அரசின் பலன்கள் / மானியங்கள் / சேவைகளை பெற ஒருவருக்கு அரசின் தகுதி சான்றிதழ் பெறுவதற்கு “இந்த” எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்

இந்தியாவில் பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் இல்லாத நபர்கள் அரசின் ஏதேனும் அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது UIDAI அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு கடந்த 11ம் தேதி அன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் வயது வந்தவர்களில் 99% பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இவர்களுக்கு நேரடியாக அரசாங்கத்தின் பலன்கள் பெற முடியும்.

அதனால் அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் வழங்கும் சமூக நலத் திட்டங்களை சீராக செயல்படுத்த பொதுமக்களின் ஆதார் எண்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். அப்போதும் தங்களின் ஆதார் எண்களை வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள் Virtual Identifier-ஐ ஒரு விருப்பமாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Wipro ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு , போனஸ்? டபுள் ஜாக்பாட்!

மேலும் ஒருவர் ஆதார் அட்டைக்கு தற்போது தான் விண்ணப்பித்திருந்தால் அவர்கள் ஆதார் பதிவு அடையாள எண் / ஸ்லிப்பை கொண்டு அரசின் பலன்கள், மானியங்கள் மற்றும் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆதார் அட்டை இல்லாதவர்கள் அரசின் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற விரும்பினால் ஆதார் சட்டத்தின் 7வது பிரிவின்படி அரசின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அரசின் பலன்கள், சேவைகளை பெற ஆதார் பதிவு அடையாள (EID) எண் அல்லது ஸ்லிப் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here