“Doodle For Google” போட்டி – 2022 ஆம் ஆண்டின் வெற்றியாளர் இவர்தான்.. அறிவித்த கூகுள்!

0
"Doodle For Google" போட்டி - 2022 ஆம் ஆண்டின் வெற்றியாளர் இவர்தான்.. அறிவித்த கூகுள்!
“Doodle For Google” போட்டி – 2022 ஆம் ஆண்டின் வெற்றியாளர் இவர்தான்.. அறிவித்த கூகுள்!

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் சார்பில் Doodle For Google போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு போட்டியின் வெற்றியாளர் குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Doodle For Google போட்டி

2009 ஆண்டு முதல் வருடந்தோறும் கூகுள் நிறுவனம் சார்பில் Doodle For Google போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான போட்டியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 20 இறுதிப் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டது. ஐந்து வகுப்பு வாரியான பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தங்களுக்குப் பிடித்த டூடுலைத் தேர்ந்தெடுத்து நெட்டிசன்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கூகுள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதில் இந்தியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் “In the next 25 years, my India will” என்ற தலைப்பில் 1,15,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறனைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம் என கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்து பல டூடுல்களில் பொதுவான கருப்பொருள் இடம் பெற்றததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை பயன்படுத்த பயமா? அப்போ VID, Masked Aadhaar பயன்படுத்துங்க!! முழு விவரம் உள்ளே!!

Exams Daily Mobile App Download

இந்த போட்டியில் வெற்றி பெறும் தேசிய அளவிலான வெற்றியாளருக்கு ரூ. 5,00,000 கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற ஷ்லோக் என்பவரின் டூடுல் Google.co.in இல் குழந்தைகள் தினத்தன்று 24 மணிநேரமும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!