புதிய வசதிகளுடன் வேற லெவலில் களமிறங்கி இருக்கும் Google செயலி – என்னனென்ன அம்சங்கள் தெரியுமா?

0
புதிய வசதிகளுடன் வேற லெவலில் களமிறங்கி இருக்கும் Google செயலி - என்னனென்ன அம்சங்கள் தெரியுமா?
புதிய வசதிகளுடன் வேற லெவலில் களமிறங்கி இருக்கும் Google செயலி - என்னனென்ன அம்சங்கள் தெரியுமா?
புதிய வசதிகளுடன் வேற லெவலில் களமிறங்கி இருக்கும் Google செயலி – என்னனென்ன அம்சங்கள் தெரியுமா?

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேடல் செயலியான கூகுள், தற்போது புதிதாக ‘Search On’ எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் அதிக ‘Visual Experience’ கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் புதிய வசதி

அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் வந்தது முதல் அனைத்து சந்தேகங்களுக்கும் ஒரே தீர்வாக கூகுள் செயலி இருக்கிறது. இந்நிலையில் கூகுள் செயலியின் திறனை மேம்படுத்த தற்போது புதிய வசதிகளை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் கூகுள் புதிதாக Multi Search ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலமாக ஒரே நேரத்தில் பல விஷயங்களை நாம் தேட முடியும். மேலும் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து இந்த புதிய வசதியில் தேடலாம்.

மேலும் இந்த புதிய வசதி மூலமாக ஆங்கில மொழி மட்டுமில்லாமல் 70 மொழிகளில் தேடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் Lens வசதியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 8 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் தேடல் செயலி 8 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும், iOS ஆப்களிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒரு விஷயத்தை தேடினால் அது குறித்த வீடியோ, புகைப்படம், இடம், முக்கிய சுற்றுலா தளங்கள் ஆகியவை காட்டப்படும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு கருக்கலைப்புக்கு உரிமை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

எடுத்துக்காட்டாக பயனர்கள் ஒரு உணவை தேடினால் அந்த உணவு எந்த உணவகத்தில் கிடைக்கும், அதேபோன்று வேறு உணவு எதுவும் இருக்கிறதா போன்ற விஷயங்கள் காட்டப்படும். அது மட்டுமில்லாமல் கூகுள் மேப் செயலியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதில் புதிதாக தாய் மொழியில் தேடும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Google Map வசதி லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், நியூ யார்க், சான் பிரான்சிஸ்கோ, டோக்கியோ போன்ற நகரங்களில் முதற்கட்டமாக செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!