4 வங்கிகளின் FD முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி – வட்டி விகிதம் அதிகரிப்பு!

0
4 வங்கிகளின் FD முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி - வட்டி விகிதம் அதிகரிப்பு!

கடந்த ஆண்டு முதல் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அதன் படி, தற்போது 4 வங்கிகள் FD மீதான அதிகபட்ச வட்டி விகிதம் 9.1% வரை உயர்த்தி உள்ளது.

வட்டி விகிதம் அதிகரிப்பு:

Axis Bank:

ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் FDகளில் மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 8.05% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. FD மீதான புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 14, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன.

மூத்த குடிமக்களுக்கு, 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.05% வழங்கப்படுகிறது. அதேசமயம், பொது வாடிக்கையாளர்களுக்கு வங்கி 3.5% முதல் 7.3% வரை வட்டியை உயர்த்தி உள்ளது.

NLC இந்தியா Associate Advisor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Federal Bank:

ஃபெடரல் வங்கியின் அறிவிப்பின் படி, மூத்த குடிமக்கள் 13 மாத காலத்துடன் FD மீது 8.07% வட்டி விகிதத்தைப் பெறலாம். சிறந்த வட்டி விகிதங்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், வங்கி திருத்தப்பட்ட FD வட்டி விகிதங்களை ஆகஸ்ட் 15, 2023 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. FD இல் ரூ.2 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canara Bank

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை கனரா வங்கி 4% முதல் 7.75% வரை மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 12, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ரூ. 15 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டில் உள்ள FDக்கு, வங்கி 444 நாட்களுக்கு 5.35% முதல் 7.90% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

Suryoday Small Finance Bank:

மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட ரூ.2 கோடிக்கும் குறைவான முதலீட்டுத் தொகைக்கு 4.50 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. Suryoday SFB வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FD களுக்கு அதிகபட்ச வட்டி விகிதமான 9.10 சதவீதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!