தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – சவரன் ரூ.47,000க்கு விற்பனை!!
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
சர்வதேச சந்தையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6345க்கும், சவரனுக்கு ரூ.50,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5875க்கும், சவரனுக்கு ரூ.47,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – கட்டணமின்றி கல்வி சான்றிதழ்.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!
மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் இன்று வெள்ளியின் விலை ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தாய்மார்கள் தற்போதே சேமித்து வைக்க விரும்புகின்றனர்.