மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.46,360க்கு விற்பனை!!

0
மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை - சவரன் ரூ.46,360க்கு விற்பனை!!
மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை - சவரன் ரூ.46,360க்கு விற்பனை!!
மீண்டும் ஜெட் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலை – சவரன் ரூ.46,360க்கு விற்பனை!!

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.80 அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததையொட்டி தங்கத்தின் விலையில் அதிகளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6255க்கும், சவரனுக்கு ரூ.50,040க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5785க்கும், சவரனுக்கு ரூ.46,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6265க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.50,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ. 5795க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!