விவாகரத்திற்காக கோபியுடன் கோர்ட்டிற்கு செல்லும் பாக்கியா, குற்ற உணர்ச்சியில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

0
விவாகரத்திற்காக கோபியுடன் கோர்ட்டிற்கு செல்லும் பாக்கியா, குற்ற உணர்ச்சியில் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
விவாகரத்திற்காக கோபியுடன் கோர்ட்டிற்கு செல்லும் பாக்கியா, குற்ற உணர்ச்சியில் கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
விவாகரத்திற்காக கோபியுடன் கோர்ட்டிற்கு செல்லும் பாக்கியா, குற்ற உணர்ச்சியில் கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி மற்றும் பாக்கியா இருவரின் விவாகரத்து வழக்கு தான் மிகவும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இது தொடர்பான காட்சிகள் இன்று சீரியலில் வர உள்ளது.

விவாகரத்து வழக்கு:

பாக்கியலட்சுமி சீரியலில் நடுத்தர வயதை அடைந்த கோபி தனது பழைய காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன் குடும்பம் மற்றும் பாக்கியாவை விட்டு விலக நினைக்கிறார். ராதிகாவிடம் தன் குடும்பத்தில் யாருக்குமே தன் மீது அக்கறை இல்லை என்றும், தன் மனைவி மிகவும் மோசமானவள் என்றும் சொல்லி வைக்கிறார். இந்த குடும்பத்தினால் தனக்கு நிம்மதி இல்லை என்று பொய்யாக சொல்லி ராதிகாவிடம் அழுகிறார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!

கோபி சொல்வது அனைத்தும் உண்மை என்று நம்பி ராதிகா அவரை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறார். ராதிகாவிற்கு ஏற்கனவே விவாகரத்து ஆகி விட்ட நிலையில், கோபியையும் விவாகரத்து பெற்று வர சொல்லி ராதிகா கேட்கிறார். வேறு வழியில்லாமல் கோபி இதை எப்படி செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ராமமூர்த்தி உடல்நிலை சரியில்லாமல் மோசமாகி விடுகிறது. இந்த உண்மை அனைத்தும் தெரிந்த ஒருவர் அவர் மட்டும் தான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோபி பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார்.

எல்லை மீறும் கொரோனா பாதிப்புகள், மீண்டும் ஊரடங்கு அமல்? நகரம் தழுவிய பரிசோதனை!

கோபியின் பிசினஸில் பாக்கியாவை இணைப்பதற்காக தான் என்று சொல்லுகிறார். இந்நிலையில், பிசினஸ் விஷயமாக நாளை கோர்ட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோபி பாக்யாவிடம் சொல்லிவிட, பாக்கியா கோயிலுக்கு செல்ல இருப்பது போல் தலையில் பூ வைத்து கிளம்பி நிற்கிறார். விவாகரத்து வங்கா போவது கூட தெரியாமல் இப்படி கிளம்பி நிற்கும் பாக்கியாவை பார்க்கும் போது கோபிக்கு சற்று குற்ற உணர்ச்சி வருகிறது. ஆனால் அதையும் மீறி வேகமாக கோர்ட்டிற்கு பாக்கியாவை கிளப்பி செல்கிறார். இனி நாளைய எபிசோடில் தான் பாக்கியாவிற்கு இது பற்றி தெரிந்து விடுமா என்ற பதில் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!