பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு I

0
பொதுத்தமிழ் வினா விடை - பிரிவு I
பொதுத்தமிழ் வினா விடை - பிரிவு I
பொதுத்தமிழ் வினா விடை – பிரிவு I

 1. உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என        திரு.வி.க எந்த காவியத்தை கூறினார்?

a) பெரிய புராணம்
b) கந்த புராணம்
c) சீறாப்புராணம்
d) திருவிளையாடற்புராணம்

2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக

a) வீடுதோறும் 10 இரந்தும்
b) வீடுதோ 10 றும் 10 இரந்தும்
c) வீடுதோர் 10 இரந்தும்
d) வீடுதோறு 10 இரந்தும்

3. பொருத்தமில்லாத இணை

a) இன்மை – இன்பம்
b) திண்மை – வலிமை
c) ஆழி – கடல்
d) நோன்மை – தவம்

4. சந்திப் பிழையற்ற தொடர் எது?

a) கடுகை துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்திற்த்தக் குறள்
b) கடுகைத் துளைத்து ஏழ்க்கடலைப் புகட்டி குறுகத்தறித்தக் குறள்
c) கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறிக்காகக் குறள்
d) கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்

5. பிறமொழிச் சொற்களை நீக்குதல்

நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்.

a) வணக்கம் என்று பணிந்தவனை வாழ்த்தினேன்
b) வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்
c) வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்
d) வணக்கம் என்று விழந்தவனை ஆசீர்வதித்தேன்

6. பிறமொழிச் சொற்களற்ற தொடர்

a) அவர்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
b) அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.
c) அவர்கள் இருவருக்கும் இடையே சம்பாஷணை நடந்தது.
d) அவர்கள் இருவருக்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது.

7. ‘வருவான்’ என்பதில் வேர்ச்சொல் யாது?

a) வரு   b) வருவார்
c) வா    d)

8. ‘கொள்’ என்று வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிய வினையெச்சம் எது?

a) கொண்டு     b) கொண்ட
c) கொள்ளற்க  d) கொண்டார்

9. ‘கொல்’ என்ற வேர்ச்சொல்லிற்கான தொழிற்பெயர் எது?

a) கொல்க    b) கொல்லற்க
c) கோறல்     d) கொன்ற

10. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிக – ‘மா’

a) குட்டி      b) கொக்கு
c) விலங்கு  d) நீர்

11. சிலப்பதிகாரம் தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியமாகும். இதனைக் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றுவர்.

a) அறிஞர் எதனைப் போற்றுவர்?
b) தமிழில முதன்முதலில் காப்பியம் தோன்றியது?
c) குடி மக்கள் காப்பியம் என்றால் என்ன?
d) தமிழில் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றியது எந்த நூல்?

12. ஒருவர் பேசுவதை அவர் பேசியபடியே கூறுவது எவ்வகைத் தொடர்?

a) செய்வினைத் தொடர்
b) பிறவினைத் தொடர்
c) நேர்கூற்றுத் தொடர்
d) அயற்கூற்றுத் தொடர்

13. பின்வருவனவற்றுள் எவ்வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியம் எனச் சுட்டிக் காட்டுக

a) பாவாணர் அரசின் உதவியுடன் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்
b) அரசின் உதவியுடன் பாவாணரால் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிடப்பட்டது.
c) அரசு உதவி செய்ததால் பாவாணர் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்.
d) சொற்பிறப்பியல் அகர முதலியை பாவாணார் அரசு உதவியுடன் வெளியிட்டார்.

14. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்.
மேவன செய்தொ லான். – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக

a) வஞ்சப்புகழ்ச்சி அணி
b) தற்குறிப்பேற்ற அணி
c) இரட்டுற மொழிதல் அணி
d) பின்வருநிலையணி

15. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை

a) 38   b) 70
c) 9     d) 10

16. தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?

a) சித்திரை 1   b) ஆடி 18
c) தை 2           d) புரட்டாசி 3

17. பொருத்துக

             a) இன்மை 1. வலிமை
             b) திண்மை 2. வறுமை
             c) ஆழி 3. தவம்
             d) நோன்மை  4. கடல்

     (a)  (b)  (உ) (ன)
a)   4     2      1      3
b)   2     1      4      3
c)   1     3      2      4
d)   3     4      1      2

18. ‘தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே’ – என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

a) சிலப்பதிகாரம்       b) சீவகசிந்தமாணி
c) கம்பராமாயணம்   d) மணிமேகலை

19. கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்களுக்கொரு முறை சடையப்ப வள்ளல் வாழ்த்திப் பாடப்பட்டுள்ளார்?

a) ஆயிரம்    b) நூறு
c) இருநூறு   d) ஐம்பது

20. பின்வருவனவற்றுள் சரியானது

i. பதிற்றுப்பத்து என்னும் நூலில் 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் பாடியுள்ளனர்.
ii. முதல் பத்தும் எட்டாம் பத்தும் கிட்டவில்லை
iii. முதல் பத்தும் 10 ஆம் பத்தும் கிட்டவில்லை.

a) i கூற்றும் ii கூற்றும் சரியே
b) i கூற்றும் iii கூற்றும் தவறு
c) i கூற்றும் ii கூற்றும் தவறு
d) i கூற்றும் iii கூற்றும் சரியே

21. பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்கள்

a) முல்லைப்பாட்டுää குறிஞ்சிப்பாட்டுää பட்டினப்பாலை
b) முல்லைப்பாட்டுää மலைபடுகடாம்ää நெடுநல்வாடை
c) மதுரைக்காஞ்சி நெடுநல்வாடைää பட்டினப்பாலை
d) மலைபடுகடாம்ää குறிஞ்சிப்பாட்டுää நெடுநல்வாடை

22. ‘பெருமாள் திருமொழி’ நூலின் ஆசிரியர் யார்?

a) குலசேகர ஆழ்வார்
b) பெரியாழ்வார்
c) திருப்பாணாழ்வார்
d) திருமங்கையாழ்வார்

23. “தான் நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” – இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

a) தேவாரம்
b) திருவாசகம்
c) நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
d) பெரியபுராணம்

24. “பொங்கு கடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே” – இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

a) கம்பராமாயணம்   b) மகாபாரதம்
c) பெரியபுராணம்     d) நளவெண்பா

25. பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல்

a) நாலடியார்
b) கலிங்கத்துப் பரணி
c) பழமொழி நானூறு
d) இன்னநாற்பது

26. “மாங்காய்ப்பால் உண்டு மலைமேலே இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் எதுக்கடி ? – குதம்பாய்
தேங்காய்ப்பால் எதுக்கடி” – இப்பாடலை எழுதிய சித்தர் யார்?

a) அகப்பேக்ச் சித்தர்
b) பாம்பாட்டிச் சித்தர்
c) குதம்பைச் சித்தர்
d) இடைக்காட்டுச் சித்தர்

27. இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று பாடுவது யாரைப்பற்றிய பாடல்?

a) வாழ்பவரை    b) இறந்தவரை
c) சிறந்தவரை    d) வள்ளலை

28. பொருத்துக

a) திருத்தொண்டத் தொகை 1. நம்மாழ்வார்
b) திருசிற்றம்பலக் கோவையார் 2.திருமங்கை ஆழ்வார்
c) திருவாய்மொழி 3. சுந்திர மூர்த்தி
d) திருக்குறுந் தாண்டகம் 4. மணிவாசகர்

       a    b    c     d
a)    3   4   2    1
b)    3   4   1    2
c)    4   3   1    2
d)    3   2   1    4

29. பணை என்னும் சொல்லின் பொருள்

a) புனல்           b)  மேகம்
c) மூங்கில்       d)  குடை

30. செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட கவிஞர் யார்?

a) சுரதா
b) பாரதிதாசனார்
c) பாரதியார்
d) கலைஞர் மு. கருணாநிதி

1 a 11 d 21 a
2 a 12 c 22 a
3 a 13 b 23 c
4 d 14 a 24 c
5 c 15 a 25 b
6 b 16 c 26 c
7 c 17 b 27 b
8 a 18 c 28 b
9 c 19 a 29 c
10 c 20 d 30 b

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!