GATE 2024 தேர்வு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் – உடனே பாருங்க!

0
GATE 2024 தேர்வு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் - உடனே பாருங்க!
GATE 2024 தேர்வு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் - உடனே பாருங்க!
GATE 2024 தேர்வு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம் – உடனே பாருங்க!

2024 ஆம் ஆண்டுக்கான GATE தேர்வுகளின் விண்ணப்ப பதிவுகள் இன்று முதல் தொடங்கப்படும் என்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் அறிவித்துள்ளது.

GATE 2024:

GATE தேர்வு மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் கல்வி நிலையங்களில் பொறியியல், அறிவியல் மற்றும் மனிதநேயத்தின் தொடர்புடைய படிப்புகளில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை படிப்புகளில் நிதி உதவியுடன் சேர்வதற்கான தேசிய அளவிலான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு ஆகும். 2024 ஆம் ஆண்டிற்கான GATE தேர்வை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான GATE தேர்வு IISc பெங்களூரு மற்றும் இதர ஏழு ஐஐடி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேர்வாக உள்ளது.

இந்தியாவில் அடுத்த மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!

குறிப்பாக GATE தேர்வின் மதிப்பெண்கள் மற்ற பொதுத்துறை மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு தேர்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளிலும் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பெண் ஆனது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். GATE 2024 தேர்வுக்கான விண்ணப்ப போர்டல் ஆகஸ்ட் 30ஆம் தேதியான இன்று தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உடனடி தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடர்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!