தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு – 419.5 கோடி ஒதுக்கீடு!

0
தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு - 419.5 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு - 419.5 கோடி ஒதுக்கீடு!
தமிழகத்தில் RTE திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு – 419.5 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி அடிப்படையில் RTE சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்கு விலக்கு அளித்து அதற்கான தொகையை சார்ந்த நிறுவனங்களுக்கு செலுத்தும்.

RTE சட்டம்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளை விட பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர். அவ்வாறு தனியார் பள்ளிகளை விரும்பும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கட்டாய கல்வி அடிப்படையில் RTE (Right To Education) திட்டம் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் இன்று வரை அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அழிப்பது ஆகும். 3 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போருக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் முழுவதும் சபரிமலை செல்ல தடை – தேவசம் போர்டு அறிவிப்பு!

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வீட்டிற்கும், பள்ளிக்கும் 1 கி.மீ இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் போன்ற பிரிவினை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் ஆண்டு வருமானம் அரசு நிர்ணயம் செய்தது போல் அமைந்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்போர் மாணவனின் ஆதார் பிறப்பு சான்றிதழ், புகைப்படம், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் என மொத்தம் 8 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த விபரத்தை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலரும் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்? எதிர்பார்ப்பு!

இத்திட்டம் எல்கேஜி முதல் 1ம் வகுப்பு வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பின்னர் தொடர்ந்து இட ஒதுக்கீடு வழங்கப்படும். கொரோனா காலகட்டம் என்பதால் 2020-21ம் கல்வியாண்டிற்கு நேரில் விண்ணப்பிக்க முடியாததால் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து RTE சட்டத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு 15 நாளில் கல்விக்கட்டணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கல்விக் கட்டணம் செலுத்த ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரும்பாலான ஏழை மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!