தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்? எதிர்பார்ப்பு!

0
தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்? எதிர்பார்ப்பு!
தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்? எதிர்பார்ப்பு!
தமிழக அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்? எதிர்பார்ப்பு!

அரசின் பல்வேறு துறையினருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் தீபாவளி போனஸ் விரைந்து வழங்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

போனஸ்:

பொதுவாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் பல்வேறு அரசு துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸ் தொகை உள்ளிட்ட சில பரிசுகள் கொடுக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஆண்டுதோறும் தீபாவளி, தசரா பண்டிகை சமயத்தில் போனஸ் வழங்கப்படும். அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படுகிறது.

CBSE 10 & 12ம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு – கல்வி வாரியம் விளக்கம்!

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளருக்கு, கடந்த ஆண்டு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இது குறித்து கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கங்கள், போனஸ் வழங்க வலியுறுத்தி, அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தனித்தனியே மனு அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 30 நாட்கள் ஊதியம் – அரசு அறிவிப்பு!

அதில், 10 ஆண்டுக்கு பின் புதிய ஆட்சி அமைந்துள்ளது. முந்தைய ஆட்சியில் சம்பள பேச்சு, போனஸ் பேச்சில் ஏற்பட்ட தாமதம் குறித்து தொழிற்சங்க கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் எல்.பி.எப்., சங்கத்தினருக்கு தெரியும். தாமதமின்றி, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, பண்டிகைக்கு ஒரு வாரம் முன், 20 சதவீதம் போனஸ் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு பஸ் டிரைவர், நடத்துனர்கள் கூறி இருந்தனர். மேலும் கடந்த ஆண்டு தீபாவளியின் போது எல்.பி.எப்., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி 20 சதவீத போனஸ் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., அரசு 10 சதவீதம் மட்டுமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!