இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!

0
இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!

நாடு முழுவதும் தற்போது ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் ஊரடங்கு விரைவில் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமைக்ரான் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனால் மத்திய அரசு பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பு!

மத்திய அரசின் வலியுறுத்தலின்படி பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஆனாலும் தற்போது இந்தியாவில் 415 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7,189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 7,286 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

தற்போது நாடு முழுவதும் 77,032 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் இருந்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

மாநில வாரியாக ஓமைக்ரான் விபரம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!