FSSAI ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – BE படித்தவர்க்கு ரூ.2,15,900 ஊதியம்..!

0
FSSAI ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - BE படித்தவர்க்கு ரூ.2,15,900 ஊதியம்..!
FSSAI ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - BE படித்தவர்க்கு ரூ.2,15,900 ஊதியம்..!
FSSAI ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – BE படித்தவர்க்கு ரூ.2,15,900 ஊதியம்..!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Director பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Food Safety and Standards Authority of India (FSSAI)
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி Within Three Weeks
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

FSSAI காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் தற்போது Director பதவிக்கு என 03 காலியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

FSSAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Chemistry / Biochemistry / Food Technology / Food Science & Technology பாடப்பிரிவில் டிகிரி / Master Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Food Technology / Dairy Technology / Biotechnology / Oil Technology / Food Process Engineering பாடப்பிரிவில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FSSAI அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசில் ஒத்த பதவிகளில் Parent cadre அல்லது துறைகளில் Level 12 என்கிற அளவில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கமான முறையில் பணி புரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனுபவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

FSSAI வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

FSSAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதிய தொகையாக Level -13 அளவின் படி குறைந்தது ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.

FSSAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து Deputation அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

FSSAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்த படிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்கள் சேர்த்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானதிலிருந்து 3 வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

FSSAI Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!