தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடருமா? மின்சார துறை முழு விளக்கம்!

0
தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடருமா? மின்சார துறை முழு விளக்கம்!
தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடருமா? மின்சார துறை முழு விளக்கம்!
தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடருமா? மின்சார துறை முழு விளக்கம்!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த கோரி மத்திய அரசு மின் வாரியத்திற்கு பல முறை கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை மாற்றியமைக்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற அறிக்கையை சமர்ப்பித்தது. இதனையடுத்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மின் கட்டணம்:

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். இதற்கு மின் நுகர்வோர்கள் தரப்பில் இருந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. எனினும் தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் கடனில் இயங்கி வருகிறது. மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, மத்திய அரசு மின் கட்டணத்தை மாற்றி அமைக்க பல முறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் செப்.12 (திங்கட்கிழமை) மின்தடைக்கான பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனை கருத்தில் கொண்டு மின் வாரியம் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியது. இதற்கு ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், தற்போது வழங்கப்பட்டு வரும் குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மின் கட்டணத்தின் படி 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட் கட்டணம் ரூ.4.50, முதல் 500 யூனிட் களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.00 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00 ஆகும். மேலும் அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம், வீட்டு உபயோக கட்டணம் ரூ.7.00 101 – 200 யூனிட்களுக்கு ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் 2027 ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!