தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து பயணம் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து பயணம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து பயணம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பேருந்து பயணம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (பிப்.28) புதுச்சேரி மக்களுக்கு இலவச பேருந்து சேவையை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்துள்ளார்.

இலவச பேருந்து பயணம்

தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகளை அரசு செயல்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – அப்ரூவல் வாங்குவது எப்படி?

இந்த நிலையில் புதுச்சேரியிலும் பொது மக்களுக்கு இலவச பேருந்து சேவையை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தொடங்கி வைத்திருக்கிறார். அதாவது, தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை புதுச்சேரியை சேர்ந்த திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.28) ஒரு நாள் மட்டும் புதுச்சேரியில் இருந்து பாகூர் பகுதிக்கு தனியார் பேருந்தில் மக்கள் இலவசமாக பயணம் செய்ய புதுச்சேரி மணவெளி தொகுதியை சேர்ந்த திமுக கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி இதெல்லாம் கட்டாயம்!

இந்த நிகழ்வை புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில அமைப்பாளருமான இரா.சிவா தொடங்கி வைத்துள்ளார். மேலும், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தை போலவே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சம்பத், அனிபால் கென்னடி மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!