தமிழகத்தில் +1 & ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் – 6.18 லட்சம் கொள்முதல்!

0
தமிழகத்தில் +1 & ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் - 6.18 லட்சம் கொள்முதல்!
தமிழகத்தில் +1 & ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் - 6.18 லட்சம் கொள்முதல்!
தமிழகத்தில் +1 & ஐடிஐ பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் – 6.18 லட்சம் கொள்முதல்!

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மிக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதால் தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது 2021 – 2022ம் ஆண்டுக்கான கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்ப்போம்.

இலவச சைக்கிள் திட்டம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிய பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு அரசு இலவச மிதிவண்டித் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. ஏனெனில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து வருவதால் அவர்களிடம் மிதிவண்டி இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் தொலைதூர மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மே 16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, தடுப்பூசி இயக்கம் துவக்கம் – மாநில அரசு முடிவு!

இந்த இலவச மிதிவண்டித் திட்டம் முக்கிய பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக கடந்த 2001ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அத்துடன் இந்த திட்டம் உயர்நிலைக் கல்வி படிக்கும் SC / ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இது மாணவர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் 11ம் வகுப்பு அனைத்து பயிலும் மாணவர்களுக்கும், ஐடிஐ மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் இதனை பெறுபவர்கள் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் மாணவர்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் அல்லது பகுதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். தற்போது இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஐடிஐ பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6.18 லட்சம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்தில் இலவசமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!