தமிழக கல்லூரி, பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கை பதிவு!

0
தமிழக கல்லூரி, பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு - சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கை பதிவு!
தமிழக கல்லூரி, பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு - சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கை பதிவு!
தமிழக கல்லூரி, பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு – சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கை பதிவு!

சென்னையில் தான் கொரோனா பரவளினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து தான் கல்வி நிறுவனத்துக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோன பாதிப்பு வழிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா பரவளினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதிலும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் தான் தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இறப்பு வீதமும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.

Exams Daily Mobile App Download

கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவில் பரவி வருவதால் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் தான் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் கார்டு ரத்து செய்யப்படுமா? ஆணையர் விளக்கம்!

இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று அதற்குரிய சிகிச்சையை வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வரும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக பாராசிட்டமால், வைட்டமின் சி மற்றும் ஜிங்க் அடங்கிய மாத்திரைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற சமுதாய நல மையங்களில் 500 மாத்திரைகள் அளவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here