புது கெட்டப்பில் மீண்டும் ‘ குக் வித் கோமாளி’யில் களம் இறங்கியுள்ள சிவாங்கி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
புது கெட்டப்பில் மீண்டும் ' குக் வித் கோமாளி'யில் களம் இறங்கியுள்ள சிவாங்கி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
புது கெட்டப்பில் மீண்டும் ' குக் வித் கோமாளி'யில் களம் இறங்கியுள்ள சிவாங்கி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
புது கெட்டப்பில் மீண்டும் ‘ குக் வித் கோமாளி’யில் களம் இறங்கியுள்ள சிவாங்கி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரபலமாக இருந்து தற்போது தமிழக மக்களின் செல்லமாக மாறியிருக்கும் சிவாங்கி தற்போது புது கெட்டப்பில் களம் இறங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோ என்றாலே அந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல், அதில் கலந்து கொள்ளக்கூடிய சாமானியர்களும் கூட பிரபலமாகி விடுகின்றனர். இதனால் விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதில், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்து நீங்காமல் உள்ள நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இதில், கடந்த சில சீசன்களுக்கு முன்னதாக கேரளாவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் சிவாங்கி. இவரின் குரலில் தனி வசீகரம் இருப்பதாக நடுவர்கள் இவரை புகழ்ந்துள்ளனர்.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு – தொலைதூர மைய ஒதுக்கீட்டால் தேர்வர்கள் அதிருப்தி!

கடந்த 2020 ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது கான்செப்ட் கொண்டுவரப்பட்டது. சமையலை திறமையாக செய்யும் ஒரு நபரும், அதை பற்றி சுத்தமாக தெரியாதவருடன் சேர்ந்து ஜோடியாக சமைக்க வேண்டும். இதற்கு நடுவில் நடுவர்கள் குறிப்பிட்ட டாஸ்க்கையும் கொடுப்பார்கள். அதையும் சேர்த்து செய்ய வேண்டும். இதில் கோமாளிகள் செய்யும் அனைத்து சேட்டைகளும் மக்களை மிகவும் கவர்ந்தது.

மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊழியர்கள் அதிர்ச்சி!

இதில், முக்கியமாக சிவாங்கியின் சேட்டைகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது. இதனால் சிவாங்கி தொடர்ந்து 2 சீசன்களிலும் கோமாளியாக கலந்து கொண்டார். தற்போதைய குக் வித் கோமாளி சீசன் 3ல் பல பழைய கோமாளிகளும் கலந்து கொள்ளும் நிலையில், அதில் சிவாங்கியும் ஒருவர். நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் இருந்த சிவாங்கி, 2ம் வாரத்தில் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். ஆனால் வர இருக்கும் வாரத்தில் சிவாங்கி மினியன் வேடத்தில் இருக்கிறார். இவர் வித்யூ லேகாவுடன் ஜோடி சேர்ந்து, புது கெட்டப்பில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here