IND vs SA : இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் – ரசிகர்கள் விமர்சனம்!

0
IND vs SA : இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் - ரசிகர்கள் விமர்சனம்!
IND vs SA : இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் - ரசிகர்கள் விமர்சனம்!
IND vs SA : இந்திய அணியில் மிடில் ஆர்டரை பலப்படுத்த வேண்டும் – ரசிகர்கள் விமர்சனம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது போட்டி இன்று பார்ல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் 2வது போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் மிடில் ஆர்டரில் கூடுதல் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் விமர்சனம்:

இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஜனவரி 17 ஆம் போலந்து மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்தது. 300 பந்துகளில் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கிய இந்திய அணியும் தவான் மற்றும் கோஹ்லியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தாக்கிய பிடிக்கவில்லை.

BOB வங்கியில் ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணபிக்க ஜன.27 கடைசி நாள்!

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிக்கர் தவான் 79 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி 63 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். பின்பு இருவரும் அவுட் ஆக மிடில் ஆர்டரில் வந்த, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 50 ஒவேரில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தோல்விக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக விளையாடாமல் அவுட் ஆனது காரணமாக கூறப்படுகிறது. இன்று தொடங்கவிருக்கும் 2 வது போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் மிடில் ஆர்டரில் கூடுதல் அதிக கணவன் செலுத்த வேண்டிய கட்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு, மானியத்தொகை வழங்கல் – அரசு உத்தரவு!

இதை தொடர்ந்து தற்போது மிடில் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரை பலப்படுத்த KL ராகுல் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடக்க வீரராக களம் இறங்கும் இந்திய கேப்டன் KL ராகுல் இந்திய அணியின் பேட்டிங் வலிமைக்காக மிடில் ஆர்டரில் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!