தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட வாரியாக பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் கடந்த வருடம் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியானது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அதனை தொடர்ந்து நேற்று முதல் அறிவிக்கப்பட்டபடி 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கி உள்ளது. சுமார் 26,76, 675 பேர் பொதுத்தேர்வை எழுத உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 6-9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு , மாவட்ட அளவிலான பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி அனைத்து மாவட்ட வாரியாக தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து சென்னையில் பொதுத் தேர்வு கால அட்டவணையை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார்.

தேர்வு கால அட்டவணை:
  • 05.05.2022 – தமிழ்
  • 07.05.2022 – ஆங்கிலம்
  • 09.05.2022 – விருப்ப மொழிப்பாடம்
  • 10.05.2022 – கணிதம்
  • 11.05.2022 – சமூக அறிவியல்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!