அதிரடியாக நேரம் மாற்றம் செய்யப்படும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் – புதிய Timing என்ன தெரியுமா?

0
அதிரடியாக நேரம் மாற்றம் செய்யப்படும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் - புதிய Timing என்ன தெரியுமா?
அதிரடியாக நேரம் மாற்றம் செய்யப்படும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் - புதிய Timing என்ன தெரியுமா?
அதிரடியாக நேரம் மாற்றம் செய்யப்படும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் – புதிய Timing என்ன தெரியுமா?

தற்போது டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் தொடர்களில் டாப் ஹிட்டாக ஒளிபரப்பாவது சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர் தான். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த தொடர் நேர மாற்றம் செய்யப்பட்டு சற்று முன்பாக டெலிகாஸ்ட் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

எதிர்நீச்சல்:

பெண் அடிமைத்தனத்தை உடைப்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் எதிர்நீச்சல். இதில் நாயகி ஜனனி எவ்வாறு ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடி ஜெயிக்கிறார் என்பதே இந்த சீரியலின் கருப்பொருள். சமீபத்தில் ஜனனியை தலைமுழுகி விட்டு தன் தம்பிக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய துணிகிறார் குணசேகரன். ஆனால் கடைசி நேரத்தில் ஜனனி உண்மையை சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்.

மேலும் தற்போது பட்டமா பாட்டி உதவியுடன் ஜனனி மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் நுழைந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார். இவ்வாறு பரபரப்பாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் தினமும் 9.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படுவதால் பல ரசிகர்கள் இது மிகவும் தாமதமான நேரம் எனவே சற்று முன்பாக அதாவது 8 அல்லது 8.30 மணி போல எதிர்நீச்சல் தொடரை டெலிகாஸ்ட் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரூம் கேட்டு சண்டை போடும் மீனா, ஐஸ்வர்யா.. மீனாவை நினைத்து வருத்தப்படும் கலை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஏற்கனவே ரசிகர்களின் கோரிக்கையின் படி தான் ரோஜா சீரியல் மதியம் 3 மணியில் இருந்து இரவு நேரம் மாற்றப்பட்டது. தற்போது எதிர்நீச்சல் சீரியலும் ஏகபோக ஹிட் அடித்துள்ளதால் இந்த சீரியலும் விரைவில் நேர மாற்றம் செய்யப்பட்டு 8.30 மணி அளவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!