EPFO SSA & Stenographer 2859 காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!
உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 2859 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
EPFO SSA & Stenographer வேலைவாய்ப்பு விவரங்கள்:
Social Security Assistant – 2674 பணியிடங்கள் மற்றும் Stenographer – 185 பணியிடங்கள் என மொத்தம் 2859 பணியிடங்கள் காலியாக உள்ளன. SSA பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Stenographer பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். ST/SC/PwBD/Female/Ex-Servicemen விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700/- வழங்கப்பட உள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
விண்ணப்பத்தாரர்கள் Prelims, Mains மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு சமூக பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு ரூ. 29,200-92,300/- மற்றும் ஸ்டெனோகிராபர் பதவிக்கு ரூ.25,500-81,100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.epfindia.gov.in/