EPFO கணக்கின் பரிவர்த்தனையை ஆன்லைனிலேயே செய்யலாம் – வழிமுறைகள் இதோ!

0
EPFO கணக்கின் பரிவர்த்தனையை ஆன்லைனிலேயே செய்யலாம் - வழிமுறைகள் இதோ!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளின் பிஎப் பணத்தை பரிவர்த்தனை செய்வதற்கான ஆன்லைன் வழிமுறைகளை இப்பதிவில் நாம் விரிவாக தெரிந்து கொள்ள முடியும்.

PF பரிவர்த்தனை:

தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஆனது பிஎஃப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது ஒரே பி எப் கணக்கில் புதிய நிறுவனத்தின் கணக்கை இணைக்க முடியும். அவ்வாறு இணைக்காமல் வேறு வேறு கணக்குகளை தொடங்குவது ஆபத்து விளைவிக்கும். ஒரு நபருக்கு ஒரே UAN நம்பர் தான் வழங்கப்படும். ஒரு UAN நம்பரின் கீழ பல பிஎஃப் கணக்குகள் இருந்தால் நாம் உடனடியாக அனைத்தையும் ஒரே கணக்கில் மாற்ற வேண்டியது அவசியம் ஆகும். இதை நாம் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாகவே செய்து கொள்ள முடியும்.

வாடகை வீட்டுக்காரர்களுக்கு புதிய சிக்கல் – மத்திய அரசு பரிசீலனை!

ஆன்லைன் வழிமுறைகள்:

  • முதலில் EPFO இணையதளத்திற்கு சென்று உங்களது யுஏஎன், அதன் பாஸ்வேர்ட், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • பின்னர் திறக்கப்படும் புதிய பக்கத்தில் ஆன்லைன் சர்வீசஸ் என்ற என்பதை தேர்வு செய்து, அதில் One Member One EPF Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது தெரியும் உங்களது தகவல்கள் அனைத்தையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இப்பொழுது புதிய பக்கத்தில் வேறு கணக்கில் மாற்ற விரும்பும் பிஎப் கணக்கை தேர்வு செய்ய வேண்டும்.
  • கெட் ஓடிபி என்பதை தேர்வு செய்து உங்கள் மொபைலில் எண்ணுக்கு அனுப்பப்படும், ஓடிபி நம்பரை உள்ளிட்டு சப்மிட் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது ஆன்லைன் பணப்பரிமாற்ற செயல்முறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு அடுத்த 15 நாட்களில் செயல்பாடுகள் அனைத்தும் முடிவடையும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!