EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!

0
EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு PF கணக்கில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து CBT ஆலோசனைக்கு பின்பாக மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிடும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

PF கணக்கு

கடந்த சில வாரங்களாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் வாடகை கொடுப்பனவு உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளை அளிக்க அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. இதற்கிடையில் மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் PF கணக்குகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் வரும் நாட்களில் நடத்தப்பட இருக்கிறது.

உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

இந்த கூட்டத்தில் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ந்த வகையில் ஓய்வூதியத்தை ரூ.1,000 இருந்து ரூ.6,000 க்கு உயர்த்த மத்திய தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இந்த தொகை ரூ.3,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

அதே போல CBT கூட்டத்தில் EPFO தொகையை தனியார் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்வது குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்படும் என சொல்லப்பட்டு வருகிறது. இப்போது வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் EPF கணக்கில் 8.5% வட்டி விகிதம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக CBT ஆலோசனை கூட்டம் நவ.16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இது வரும் நாட்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!