உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

அனைவருக்கும் திருமணத்தின் பொது பல்வேறு செலவுகள் ஏற்படும். அதனால் பல்வேறு நிறுவனங்களின் மூலம் பர்சனல் மேரேஜ் லோன் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய லோனை எப்படி பெறுவது என்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

மேரேஜ் லோன்:

இந்தியாவில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி கடந்த ஆண்டு 10 இல் 2 பேர் திருமண செலவிற்காக லோன் அப்ளை செய்து வருகின்றது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறையினர் தங்களது திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது அறியப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு நிறுவனங்கள் பர்சனல் லோன் அடிப்படையில் திருமண செலவிற்கான மேரேஜ் லோன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்தகைய லோன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் அறிவிப்பு!

அதனால் திருமண லோன் பெறுபவர்கள் லோன் பெறப்போகும் நிறுவனங்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும்போது உங்கள் வருமானம், வட்டி விகிதம், மாதாந்திர ஈ.எம்.ஐக்களுக்கு உகந்த வாய்ப்புகளை கொண்டிருக்கும் கடன் வழங்குவபரை தேர்ந்தெடுத்து கடனுக்கு விண்ணபிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுவார்கள். மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களிடம் லோன் அப்ளை செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த திருமண கடன் உங்களது பல்வேறு தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

திருமண லோன் பெறுவதற்கான தகுதிகள்:
  • அனைத்து நிறுவனங்களும் உங்களது கடனுக்கும், வருமானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு பார்ப்பதுண்டு. அதனால் நீங்கள் ஒரு எம்என்சி அல்லது அரசு, தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்.
  • லோன் பெறுவதற்கு எப்போதும் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமே முக்கியம் கிடையாது, நிலையான சம்பளம் வாங்குவதும் முக்கியம்.
  • பொதுவாக திருமண லோன்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதால், சிபில் ஸ்கோர் அதிக கவனத்திற்கு உள்ளாகும். உங்கள் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களால் விருப்பப்பட்ட லோன்களை எடுக்க முடியும்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணம் – அரசு பரிசீலனை!

  • அவ்வாறு இல்லாமல் 700 க்கு குறைவாக இருந்தால் நீங்கள் குறைந்த பணமே லோனாக பெற முடியும் அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
  • மேலும் இந்த லோன் பெறுவதற்கு கடைசி இரண்டு மாத சம்பள ஸ்லிப், கடைசி மூன்று மாத சம்பள கணக்கு ஸ்டேட்மென்ட், KYC ஆவணங்கள், நிறுவன ஐடி கார்ட் உள்ளிட்டவை தேவைப்படும்.
  • ஒருவேளை உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்து, தகுதியும், வரம்புகளும் இருந்தால் உங்களது லோன் ஏற்றுக்கொள்ளப்பட்டு லோன் தொகை வழங்கப்படும்.
  • லோனை 60 மாதத்தில் திரும்ப செலுத்தலாம்,அதேபோல் Interest – Only Installments முறை மூலம் நீங்கள் உங்கள் மாத லோன் செலவில் 45% வர கட்டுப்படுத்த முடியும். கூடுதல் விவரங்களுக்கு ஆன்லைனில் Marriage Loan Details என்று தேடி தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!