EPFO பயனர்களின் குறைகளை எவ்வாறு பதியலாம்? – வழிமுறைகள்!

0
EPFO பயனர்களின் குறைகளை எவ்வாறு பதியலாம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்த தகவல்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO குறைகள்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் ஆனது ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அமைப்பாகும். 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் தன் ஊழியர்களுக்கு இந்த சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்க வேண்டும். மாதம்தோறும் ஊழியர்கள் செலுத்தி வரும் தங்கள் ஊதியத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு எதிர்காலத்தில் ஓய்வூதியமாக மாதந்தோறும் ஊழியர்களுக்கு கிடைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான ஊழியர்களின் புகார்கள் அனைத்தும் இ பி எஃப் ஓ வாரியத்தின் குறைதீர்ப்பு போர்ட்டல் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

வழிமுறைகள்:
  • EPFO போர்ட்டலில் தங்கள் குறைகளை ஊழியர்கள் பதிவு செய்வதற்கு அதன் அதிகாரப்பூர்வ EPFiGMS தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் குறைகளை பதிவு செய்தல் என்பதை தேர்வு செய்து, அங்குள்ள நான்கு விருப்பங்களில் உங்களுக்கு பொருந்தக் கூடியதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்களின் தனிப்பட்ட UAN மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட்டு விவரங்களை பெறு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது UAN, மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்கள் திரையில் தோன்றும்.
  • இதன் பிறகு விவரங்களை சரிபார்த்து Get OTP என்பதை தேர்வு செய்து OTP யை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதன் பின்கு பயனர்களின் பாலினம், நாடு, மாநிலம், முகவரி போன்ற விவரங்களை தேர்வு செய்து PF கணக்கு எண்ணை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது திறக்கும் புதிய திரையில் உங்களது குறைகளை பதிவு செய்து புகார் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு இறுதியாக சேர் என்பதை கிளிக் செய்து, சமர்ப்பி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்களது புகார் EPFO வாரியத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விவரங்கள் அனைத்தையும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

திருமணத்திற்கு பின் ஆதார் அட்டையில் குடும்ப பெயரை மாற்ற வேண்டுமா? முழு விவரம் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!