EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தான் பணம் கிடைக்கும்!

0
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - 'இதை' செய்தால் தான் பணம் கிடைக்கும்!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - 'இதை' செய்தால் தான் பணம் கிடைக்கும்!
EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதை’ செய்தால் தான் பணம் கிடைக்கும்!

இந்தியாவில் பிஎப் கணக்குதரார்கள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கை பிஎப் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று EPFO அமைப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாகவும் இந்த வேலையை எளிதாக முடிக்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிஎப் கணக்கு:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத்திலிருந்து பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை ஊழியர்கள் ஓய்வு பெறும் போது பேருதவியாக உள்ளது. பிஎப் கணக்கு தொடங்கும் ஒவ்வொரு ஊழியரும் தனக்கென ஒரு நாமினியை தேர்வு செய்வது அவசியமாகும். ஒரு வேலை பிஎப் கணக்குதாரர் இறந்தால் அவருக்கு பிறகு அவரின் நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். நாமினியாக தேர்வு செய்யப்படுபவர்கள் புகைப்படம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், முகவரி ஆகியவை அவசியமாகும்.

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக குறைப்பு? முக்கிய தகவல்!

ஆன்லைன் மூலம் விட்டிருந்த படியை நமியை தேர்வு தேர்வு செய்யும் வேலையை முடித்து விடலாம். கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட போது ஏராளமான போருக்கு பிஎப் தொகை உதவியது. இந்த நிலையில் PF வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டு 8.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வபோது ஈபிஎப்ஓ புதிய பிஎப் கணக்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்க அறிவுறுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று EPFO அமைப்பு தெரிவித்துள்ளது. அப்போதுதான் பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பிஎப் – வங்கி கணக்கு இணைக்கும் முறைகள்:
  • முதலில் https://www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் டாப் மெனுவில் ‘Manage’ என்ற வசதியை கிளிக் செய்யவும். பிறகு அதிலுள்ள ‘KYC ஆப்சனை தேர்ந்தெடுத்து document type என்பதில் ‘Bank’ என்பதை தேர்ந்தெடுத்து வங்கி கணக்கு விவரங்களை நிரப்பவும்.
  • வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிட்ட உடன் ‘Save’ கொடுக்க வேண்டும்.
  • மேலும் வங்கி கணக்கு விவரங்களை பிஎப் நிறுவனத்தின் சரிபார்ப்புக்கு அனுப்ப வேண்டும்.
  • நிறுவனம் தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் வங்கிக் கணக்கு விவரங்கள் பிஎஃப் கணக்கில் அப்டேட் ஆகிவிடும். இந்த சித்து உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!